05 பொலிசாரின் விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் ஐவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை எதிர்வரும் 9ஆம் திகதிவரை மீண்டும் தடுத்துவைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி கொக்குவில், குளப்பிட்டி சந்திக்கு அண்மையில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அந்த தருணத்தில் வாகன போக்குவரத்து ஒழுங்கமைப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, மாணவர்களின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை எதிர்வரும் மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் தடுத்துவைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் எஸ்.சதீஸ்வரன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *