டெங்கு முறைப்பாட்டு மத்திய நிலையங்கள்!

மேல் மாகாணத்தை மையப்படுத்தி 24 மணி நேரமும் செயற்படக் கூடிய டெங்கு முறைப்பாட்டு மத்திய நிலையங்கள் மூன்றை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அந்த நிலையங்களில் பொலிஸாரையும் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், 48,682 டெங்கு நோயாளர்கள் பதிவாகி இருப்பதுடன், 77 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், 10 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அளவு ஓரளவில் இருந்தாலும், மேல் மாகாணத்தில் அதிகமான நோயாளர்கள் பதிவாவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்காக நுளம்பு ஒழிப்புத்துறை உதவியாளர்கள் 500 பேரை மேல் மாகாணத்திற்கு இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *