நடுவானில் பறந்த அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஊழியர்கள், பயணிகள் மர்மமான முறையில் திடீர் சுகவீனம் அவசரகால நிலைமையின் கீழ் விமானம் தரையிறக்கம்

லண்­ட­னி­லி­ருந்து அமெ­ரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ருக்குப் பய­ணித்த அமெ­ரிக்கன் எயார்லைன்ஸ் விமா­ன­மொன்றிலிருந்த பய­ணி­களும் விமான ஊழி­யர்­களும் நடு­வானில் சுக­வீ­ன­ம­டைந்­த­தை­ய­டுத்து அந்த விமானம் திருப்­பப்­பட்டு அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் லண்­டனில் புதன்­கி­ழமை மாலை தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், மேற்­படி ஏஏ109 போயிங் 777- – 300 விமா­னத்தில் இடம்­பெற்ற இந்தத் திடீர் சுக­வீ­னத்­துக்­கான காரணம் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

அந்த விமானம் ஐஸ்­லாந்தின் கெபி­ளாவிக் நக­ருக்கு அண்­மையில் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­துக்கு மேலாக பறந்து கொண்­டி­ருந்த வேளை இந்த விமா­னத்தின் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்­த­துடன் ஏனைய விமான ஊழி­யர்கள் நால்­வரும் பய­ணிகள் இரு­வரும் கடும் சுக­வீ­னத்­துக்­குள்­ளா­கினர்.

இந்­நி­லையில், விமா­னத்தில் பெரும் பீதியும் பதற்­றமும் ஏற்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *